மேலும் செய்திகள்
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பணிகள்
10-Oct-2025
விருதுநகர்: விருதுநகரில் முன்னேறத்துடிக்கும் மாவட்டம் தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் செயலாளர் ஆய்வு செய்தார். மத்திய பொறுப்பு அலுவலரான பள்ளிக்கல்வித்துறையின் கூடுதல் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். ரத்தசோகை குறைபாடு உள்ள 56 சதவீதம் பள்ளிக் குழந்தைகளின் முன்னேற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பேறு கால சிசு மரணம், மாவட்ட உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகரித்ததை பாராட்டினார். விளைநிலங்களில் காட்டுப் பன்றிகளால் ஏற்படக்கூடிய இழப்புகளை தடுப்பதற்கு அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறும், திருச்சுழி, நரிக்குடி வட்டாரப்பகுதிகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் தொடர்புடைய அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
10-Oct-2025