உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் வாகன போக்குவரத்தில் மாற்றம்

விருதுநகரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் வாகன போக்குவரத்தில் மாற்றம்

விருதுநகர் : விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப். 6 (இன்று) முதல் 8 வரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.பராசக்தி மாரியம்மன் திருவிழா மார்ச் 30ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஏப். 13 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக ஏப். 6 (இன்று) பொங்கல் வைத்தல், நாளை அக்னிச்சட்டி எடுத்தல், ஏப். 8ல் தேரோட்டம் ஆகியவை நடக்கின்றன. இதையடுத்து ஏப். 6 முதல் 8 வரை கீழ்காணும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.விருதுநகர் வழியாக மதுரை - சிவகாசி - மதுரை செல்லும் வாகனங்கள் ஓட்டல் ஜங்ஷன், கணபதி மில் ஜங்ஷன் வழியாக புது பஸ் ஸ்டாண்ட் வந்து மீண்டும் அதே வழியாக செல்ல வேண்டும். மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்செந்துார் செல்லும் வாகனங்கள் ஓட்டல் ஜங்ஷன், கணபதி மில் ஜங்ஷன் வழியாக புது பஸ் ஸ்டாண்ட் வந்து மீண்டும் கணபதி மில் ஜங்ஷன், கலெக்டர் ஆபீஸ் வழியாகச் செல்ல வேண்டும். இரு மார்க்கங்களுக்கும் இவ்வழி பொருந்தும்.திருமங்கலம், தென்னமநல்லுார், எம்.புளியங்குளம், சித்துார், பேக்குளம், டி.கல்லுப்பட்டி, காரியாபட்டியில் இருந்து வரும் வாகனங்கள் பி.ஆர்.சி., ஜங்ஷன், புல்லலக்கோட்டை ஜங்ஷன், போலீஸ் பாலம் ஜங்ஷன், மீனாம்பிகை பங்களா ஜங்ஷன் வந்து ஒருவழிப்பாதையாக உழவர்சந்தை, புல்லலக்கோட்டை ஜங்ஷன் வழியாகச் செல்ல வேண்டும்.காரியாபட்டியில் மல்லாங்கிணர் வழியாக விருதுநகர் வரும் டவுன் பஸ்கள் அரசு மருத்துவமனை ஜங்ஷன், அல்லம்பட்டி முக்குரோடு, எம்.ஜி.ஆர்., சிலை ஜங்ஷன், புது பஸ் ஸ்டாண்ட் வந்து மீண்டும் அதே வழியாகச் செல்ல வேண்டும். அருப்புக்கோட்டை, பாலவநத்தம் வழியாக விருதுநகர் வரும் டவுன் பஸ்கள் அல்லம்பட்டி முக்குரோடு, எம்.ஜி.ஆர்., சிலை ஜங்ஷன், புது பஸ் ஸ்டாண்ட் வந்து மீண்டும் அதே வழியாகச் செல்ல வேண்டும்.சிவகாசி, ஆமத்துார், ஸ்ரீவி.,யில் இருந்து வரும் டவுன் பஸ்கள் ஓட்டல் ஜங்ஷன், கணபதி மில் ஜங்ஷன், புது பஸ் ஸ்டாண்ட், எம்.ஜி.ஆர்., சிலை ஜங்ஷன், ஆத்துப்பாலம் ஜங்ஷன், பர்மாகாலனி ஜங்ஷன், மீனாம்பிகை பங்களா ஜங்ஷன் வந்து ஒருவழிப்பாதையாக உழவர்சந்தை, புல்லலக்கோட்டை ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.சாத்துார், ஆர்.ஆர்.நகர், சங்கரலிங்காபுரம், ஒண்டிப்புலி, தாதம்பட்டியில் இருந்து வரும் டவுன் பஸ்கள் கணபதி மில் ஜங்ஷன் வழியாக புது பஸ் ஸ்டாண்ட், எம்.ஜி.ஆர்., சிலை ஜங்ஷன், ஆத்துப்பாலம் ஜங்ஷன், பர்மாகாலனி ஜங்ஷன், மீனாம்பிகை பங்களா ஜங்ஷன் வந்து ஒருவழிப்பாதையாக உழவர்சந்தை, புல்லலக்கோட்டை ஜங்ஷன், புது பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்ல வேண்டும்.ஆத்துப்பாலம் ஜங்ஷன், பர்மாகாலனி ஜங்ஷன், மாவட்ட நுாலகம், மீனாம்பிகை பங்களா ஜங்ஷன், உழவர்சந்தை, புல்லலக்கோட்டை ஜங்ஷன் ஏப். 6 முதல் 8 வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வாகனங்கள் லாட்ஜ் ஜங்ஷன், ரயில்வே காலனி வழியாகவும் ஸ்டேஷனில் இருந்து வெளியேறும் வாகனங்கள் கே.ஆர்.கார்டன், கே.வி.எஸ்.,பள்ளி பொருட்காட்சி ஜங்ஷன், லாட்ஜ் ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை