உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இறை நாமத்தை பாடுவதால் கஷ்டங்கள் விலகும்

இறை நாமத்தை பாடுவதால் கஷ்டங்கள் விலகும்

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா 3ஆம் நாளில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில் பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மைய பொறுப்பாளர் கிருஷ்ண சைதன்ய தாஸ் பேசிய தாவது; இறை நாமத்தை பாடுவதால் நமது அனைத்து கஷ்டங்களும் விலகும். எல்லா நன்மைகளும் பெருகும். ஆஞ்சநேயர் ராம நாமத்தை சொல்லி கடலை தாண்டினார். மலையை துாக்கினார். திரவுபதி கஷ்ட காலத்தில் கோவிந்தா என்று அழைத்ததால் பகவான் கிருஷ்ணர் வஸ்திரம் கொடுத்து காப்பாற்றினார். எல்லோருக்கும் எல்லாவிதமான நன்மைகள் கிடைக்க தினமும் ராம மந்திரத்தை சொல்லி பயனடைவோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !