உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுவர்கள் விளையாட்டு பொருள் அகழாய்வில் கண்டெடுப்பு

சிறுவர்கள் விளையாட்டு பொருள் அகழாய்வில் கண்டெடுப்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட 20 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3520க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது சிறுவர்கள் விளையாடும் சுடுமண் விளையாட்டுப் பொருள் தட்டு வடிவில் கண்டெடுக்கப்பட்டது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், முன்னோர்கள் பொழுதுபோக்கிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அந்த வகையில் சுடுமண் ஆட்ட காய்கள், பெண்கள் விளையாடும் வட்ட சில்லுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. தற்போது சிறுவர்கள் விளையாடும் தட்டு வடிவிலான விளையாட்டு பொருள் கிடைத்துள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ