மேலும் செய்திகள்
காத்திருப்பு போராட்டம்
19-Aug-2025
விருதுநகர்; சென்னையில் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி மறுத்து சி.ஐ.டி.யு., மாநிலத் தலைவர் சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் உள்பட 500க்கும் மேற்பட்டோரை கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை கண்டித்து விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சி.ஐ.டி.யு., மண்டல பொதுச் செயலாளர் வெள்ளைத்துரை தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய சங்க தலைவர் திருப்பதி, உழைக்கும் பெண்கள் ஒங்கிணைப்பு குழு கன்வீனர் சாராள், சி.ஐ.டி.யு., மாவட்ட உதவி தலைவர் முருகன், ஓய்வூதியர் நல அமைப்பு காத்தப்பன், காத்தமுத்து உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
19-Aug-2025