உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மூடப்பட்ட ஆழ்துளை கிணறு

 மூடப்பட்ட ஆழ்துளை கிணறு

காரியாபட்டி: காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே அதிக மக்கள் நடமாடும் இடத்தில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருந்தது. ஆட்டோ ஸ்டாண்ட், டீக்கடைக்கு என பலரும் வந்து சென்றனர். ரோட்டோரத்தில் திறந்த நிலையில் ஆபத்தான ஆழ்துளை கிணற்றால் விபத்து அச்சம் இருந்தது. சிறுவர்கள் தவறி விழும் ஆபத்தான சூழ்நிலை இருந்தது. இரவு நேரங்களில் இடறி விழுந்து பலர் காயம் அடைந்தனர். மேலும் விபத்து ஏற்படும் முன் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று முன்தினம் ஆழ்துளை கிணறை மூடினர். தற்போது மக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை