காபி வித் கலெக்டர்
விருதுநகர் : விருதுநகரில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி சிவகாசி கார்னேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் 45 மாணவர்களுடன் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களிடம், அவர்களுடைய லட்சியம், எந்த துறையில் ஆர்வம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி, இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்த கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது: பிளஸ் 2 வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம், என்றார். இந்நிகழ்வுக்கு பின் தங்களுக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானதாகவும், கேள்விகள், சந்தேகங்களுக்கு கலெக்டர் தெளிவான விடை கொடுத்ததாகவும் மாணவர்கள் கூறினர்.