உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உழவர் சந்தையில் குளிர்பதன கிடங்கு பழுது: விவசாயிகள் அவதி

உழவர் சந்தையில் குளிர்பதன கிடங்கு பழுது: விவசாயிகள் அவதி

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் உள்ள உழவர் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன கிடங்கு பழுதடைந்து போனதால் காய்கறிகளை இருப்பு வைக்க முடியாமல் வாடி போவதால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் 2000ம் ஆண்டில், உழவர் சந்தை அமைக்கப்பட்டது. அருப்புக்கோட்டை சுற்றியுள்ள திருச்சுழி, புலியூரான், செம்பட்டி, இலங்கிபட்டி, பரளச்சி, ஆத்திப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை இங்கு வந்து விற்பனை செய்வர். விற்பனை செய்தது போக மீதமுள்ள காய்கறிகளை பாதுகாப்பதற்கு வசதி இல்லாததால் கீழே கொட்டினர். இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் செலவில் சூரிய ஒளியில் இயங்கும் குளிர் பதன கிடங்கு அமைக்கப்பட்டது. இதில் 5 டன் வரை காய்கறிகளை பாதுகாப்பாக வைக்கலாம். விவசாயிகள் மீதமுள்ள காய்கறிகளை வாடி போகாமல் இருக்க இந்த குளிர்பதன கிடங்கில் வைத்து விட்டு செல்வர்.பிரெஷ் ஆக இருப்பதால் மறுநாள் இதை விற்பர். விவசாயிகளுக்கு இந்த கிட்டங்கி வசதியாக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு கிட்டங்கி மோட்டார் பழுதால் செயல்படாமல் போனது. விவசாயிகள் காய்கறிகளை கிட்டங்கியில் வைக்க முடியாமல் அவதிப்பட்டனர்.இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறையிடம் தகவல் தெரிவித்தும் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளதால் விவசாயிகள் தினம் தினம் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை