உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மே 15க்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அவசியம் கலெக்டர் அறிவிப்பு

மே 15க்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அவசியம் கலெக்டர் அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகரில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் அவற்றின் பெயர் பலகையை தமிழில் அமைப்பதை உறுதி செய்யும் மாவட்ட குழு கூட்டம் நடந்தது.மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்க பிரதிநிதிகள், ஓட்டல் உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள், பட்டாசு, தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள் சங்கம், குறு, சிறு தொழில்கள் சங்கம் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட குழு கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.அவர் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், பி.டி.ஒ.,க்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் அனைத்து நிறுவன, தொழிற்சாலை உரிமையாளர்கள், வர்த்தக சங்கங்களுடன் கூட்டம் நடத்தி தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வர்த்தகர், தொழிற்சாலை உரிமையாளர்கள், உணவு நிறுவன உரிமையாளர் சங்கங்கள் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக எடுத்துரைத்து மே 15க்குள் அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவீதம் தமிழில் பெயர் பலகைகள் அமைக்க அறிவுறுத்த வேண்டும்.அதற்கு பின்னும் தமிழில் பெயர் பலகை அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதமானது ரூ.50லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ