உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு அங்கீகாரம் பெறாத கல்லுாரிகள் மாணவர்களை அணுகினால் நடவடிக்கை கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை

அரசு அங்கீகாரம் பெறாத கல்லுாரிகள் மாணவர்களை அணுகினால் நடவடிக்கை கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை

விருதுநகர்: கல்லுாரிகளுக்கு பள்ளி மாணவர்களின் விவரங்களை அளித்தலோ, அரசு அங்கீகாரம் பெறாத கல்லுாரிகள் மாணவர்களை அணுகினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களை பொதுத்தேர்வு நடக்கும் போதும், தேர்வு முடிவுகள் வெளியான பின்பும் அரசு அங்கீகாரம் பெறாத தனியார் கல்வி நிறுவனங்கள், கல்லுாரிகள் அணுகி சேர்ப்பதாக தொடர்ந்து தகவல்கள் வருகின்றன.ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை இது போன்ற கல்லுாரிகளுக்கு வழங்குவதாக புகார்கள் வருகின்றது. இவ்வாறு கல்லுாரிகளுக்கு மாணவர்களின் விவரங்களை அளிப்பதோ, சேர்க்கவோ கூடாது. மாணவர்கள் உயர்கல்வி குறித்த சந்தேகங்களை பள்ளி முதுகலை உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.கல்லுாரிகளுக்கு நேரடியாக மாணவர்களின் விவரங்களை அளித்தாலும், சேர்த்தாலும், அங்கீகாரம் இல்லாத கல்லுாரிகள் மாணவர்களை நேரடியாக அணுகினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை