கிராம சபை கூட்டம் கலெக்டர் பங்கேற்பு
சிவகாசி : சிவகாசி அருகே பெரிய பொட்டல்பட்டியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மழை நீரினை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரி செய்து தண்ணீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றி புனரமைத்தல், கால்வாய்களை துார்வாரி புனரமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. திட்ட இயக்குனர் தண்டபாணி, சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன், உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.