உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மண் அடுக்குகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள்

மண் அடுக்குகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்கள்

சிவகாசி; வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் நடக்கும் மூன்றாம் கட்ட அகழாய்வில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லுாரி மாணவர்கள் அகழாய்வு குழிகளை சமநிலைப்படுத்தி மண் அடுக்குகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3300 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லுாரி மாணவர்கள் அகழாய்வு குழிகளை சமப்படுத்தி மண் அடுக்குகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் கல்லுாரி வரலாற்று துறை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் எவ்வாறு பணி செய்வது என்பதை கேட்டறிந்து மண் அடுக்குகளை பிரித்தனர்.அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறுகையில், அகழாய்வு குழிகள் குறிப்பிட்ட அளவு தோண்டப்பட்ட பின்னர் நிறுத்தப்படும். இதனை சமப்படுத்தவும் மண் அடுக்குகளை பிரிக்கும் பணியில் கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டனர். இது எங்களுக்கும் உதவியாக இருந்தது, என்றார்.மாணவர்கள் கூறுகையில், தொல்லியல் துறை குறித்து பாடம் படிப்பதோடு மட்டுமல்லாமல் நேரடியாக களத்தில் இருந்து பணி செய்ததால் எங்களுக்கு முழுமையாக புரிந்தது. ஒவ்வொரு பொருளும் எந்த காலத்தைச் சேர்ந்தது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி