விஜய கரிசல்குளம் அகழாய்வு பணிகளை பார்வையிட்ட கல்லுாரி மாணவர்கள்
சிவகாசி: விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வு பணிகளை திருநெல்வேலி கல்லுாரியைச் சேர்ந்த தொல்லியல் துறை மாணவர்கள் பார்வையிட்டனர்.விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி, சூது பவள மணி என 1900 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அகழாய்வு பணிகளையும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிடுவதற்காக திருநெல்வேலி துாய சவேரியார் கலைக்கல்லுாரி தொல்லியல் துறை மாணவர்கள் வந்திருந்தனர். இவர்கள் அகழாய்வு பணிகள் குறித்து கேட்டு அறிந்ததோடு காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர்.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லுாரி மாணவர்கள் பார்வையிட வந்த நிலையில் தற்போது வெளி மாவட்டத்தில் இருந்து கல்லுாரி மாணவர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கு அகழாய்வு பணிகள் குறித்து முழுமையாக விளக்கப்பட்டது.