1008 முறை திருப்பாவை முற்றோதல்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சர்வ சமுத்திர அக்ரஹாரத்தில் உள்ள சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் 1008 முறை திருப்பாவை முற்றோதல் பாராயண நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயர் ஆண்டாள் பெருமைகள், திருப்பாவையின் முக்கியத்துவம் பற்றி பேசி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக பல்வேறு பகுதியில் இருந்து பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்கள் 1008 திருப்பாவை பாராயணத்தை பாடினர். சந்தான வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு பூஜை பலகாரம் நடந்தது. பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அகத்திய தமிழ்ச்சங்கம், கோதை நாச்சியார் தொண்டர் குழாம், சந்தான வேணுகோபால சுவாமி கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.