மேலும் செய்திகள்
விவசாய மின்சாரத்திற்கு 1,685 தனி வழித்தடங்கள்
18-Sep-2024
விருதுநகர் : விருதுநகர் - - ஆமத்துார் ரோட்டில் நீர்வழித்தடங்களில் லாரிகளில் கொண்டுச் செல்லும் மீதமுள்ள கான்கீரிட் கலவை கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது.விருதுநகரில் இருந்து ஆமத்துார் செல்லும் ரோட்டில் இருபுறமும் நீர் வழித்தடங்கள் செல்கிறது. இந்த வழித்தடங்கள் சமீபகாலமாக குடியிருப்புகள், கடைகளின் பெருக்கத்தால் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.தொழிற்சாலை, வீடுகள், வணிக வளாகங்கள் கட்டுமானத்திற்கு தற்போது ரெடிமேட் கான்கீரிட் கலவை பயன்படுத்தப்படுகிறது. இதனால் வேலைப்பளு குறைந்து பணிகளும் விரைவில் முடிக்கப்படுவதால் பலரும் விரும்புகின்றனர். இவை லாரிகள் மூலம் தேவையான அளவில் கட்டுமானம் நடக்கும் இடத்திற்கு நேரடியாக கொண்டுச் செல்லப்படுகிறது.இதில் மீதமான கான்கீரிட் கலவையை லாரியில் நிறுவனத்திற்கு கொண்டுச் சென்று முறையாக அகற்ற வேண்டும். ஆனால் பலர் திரும்ப செல்லும் வழியில் உள்ள ரோட்டின் ஓரங்கள், நீர்வழித்தடங்களில் கொட்டிச்செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விருதுநகர் -- ஆமத்துார் ரோட்டில் வள்ளியூர் அருகே ரோட்டின் ஓரமாக செல்லும் நீர்வழித்தடத்தில் மீதமுள்ள கான்கீரிட் கலவையை கொட்டி நீர்பாதையை தடை செய்துள்ளனர். இதனால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு நிலத்தடி நீர்வளம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் தங்கள் பணியை முறையாக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
18-Sep-2024