உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காங்., ஆர்ப்பாட்டம்

காங்., ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் தேசபந்து மைதானத்தில் காங்., எம்.பி., ராகுல் கைது, பா.ஜ.,வுடன் இணைந்து செயல்படும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் காங்., நகரத்தலைவர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலுமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். * டெல்லியில் வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியல் செய்யப்பட்டதை கண்டித்து தேர்தல் கமிஷனை நோக்கி ராகுல் எம்.பி. தலைமையில் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். டெல்லி போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனை கண்டித்து சாத்துார் வடக்கு ரத வீதியில் காங்., நகரத் தலைவர் அய்யப்பன்,தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகர தலைவர் ஆறுமுகம் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி