உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

ராஜபாளையம்; ராஜபாளையம் பழையபாளையம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் காலை திருமுறை பாராயணம், மகா சங்கல்பம், கோ பூஜை, தொடர்ந்து மாலை இரண்டாம் கால யாக பூஜை சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6:00 மணி முதல் மூன்றாம் கால யாக பூஜை மந்திரங்களை தொடர்ந்து 11:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் பால விநாயகர் பாலமுருகன் நந்தீஸ்வரர், சகல பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்து உங்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ