உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் விறு, விறுவென நடைபெறும் அரசு அருங்காட்சியக கட்டுமான பணிகள்

விருதுநகரில் விறு, விறுவென நடைபெறும் அரசு அருங்காட்சியக கட்டுமான பணிகள்

விருதுநகர்: விருதுநகரில் மந்தநிலையில் நடந்து வந்த அரசு அருங்காட்சியக கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விருதுநகரில் அரசு அருங்காட்சியகம் ரூ.6.80 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. 2024 பிப். 26ல் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. ஆக. மாதம் கட்டுமான பணிகள் குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகள் எப்போது முடிக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். 3 மாதங்களில் முடியும் என்றனர். அப்போது அமைச்சர் பேசுகையில், நீங்கள் அருங்காட்சியகம் கட்டி முடிக்கும் வரை திறப்பு விழாவிற்காக முதல்வர் காத்திருப்பாரா. கட்டுமான பணிகள் மிகவும் மெதுவாக நடந்து வருகிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும், என கடிந்துக் கொண்டார். இந்நிலையில் அதற்கு பிறகு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அக். 31க்குள் கட்டுமான பணிகள் முழுமை அடையும். அதற்கு பின் பழம் பொருட்களை வைப்பதற்கான பணிகள் நடக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தற்போதுஅருங்காட்சியகம் வாடகை கட்டத்தில் இயங்கி விருகிறது. இதில் 1200க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன. மூன்று தளங்களுடன், காட்சி கூடம், கல்வெட்டு காட்சி கூடம், நாணயவியல் காட்சி, சேகரிக்கப்பட்ட வைப்பு அறையும் உள்ளது. மாவட்டத்தின் பருத்திகுடி, வெண்பு நாடு உள்ளிட்ட பழமை ஊர்களில் எத்தகைய சூழல் இருந்தது, மாவட்டத்தின் வரலாறு என்ன, தொல் பழங்கால வரலாறு எதை தொட்டு செல்கிறது, இங்கு வாழ்ந்த மக்களுடைய நாகரீகம் ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய அருங்காட்சியகம் விரைந்து செயல்பாட்டிற்கு வந்தால்பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு நன்கு பயன்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி