மேலும் செய்திகள்
டூவீலர் - லாரி மோதிய விபத்தில் விரிவுரையாளர் பலி
05-Sep-2025
உசிலம்பட்டி:தேனி மாவட்டம், கடமலைக்குண்டு காவேரி தோட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன், 62. மனைவி மாய கிருஷ்ணம்மாள், 59. இவர்களின் மூத்த மருமகள் விஜயபாரதி, 30. இளைய மகன் அசோக்குமார், 37, இவரது மனைவி சித்ரா, 28, மகன் சர்வின், 9, மாரியப்பனின் தங்கை சுருளியம்மாள், 51, ஆகியோர், நேற்று முன்தினம் ஒரே காரில் விருதுநகர் மாவட்டம், சிவகிரியில் மாரியப்பனின் மூத்த மகள் வசந்தி இல்ல விழாவிற்கு சென்றனர். பின், நேற்று முன்தினம் இரவு, சிவகிரியிலிருந்து ஊருக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு உசிலம்பட்டி -- தேனி ரோட்டில், மாதரை கிரா மம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், புளிய மரத்தில் மோதியது. இதில் மாரியப்பன், மாயகிருஷ்ணம்மாள் இறந்தனர். காயமடைந்த அசோக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மற்றொரு விபத்து கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு, நேற்று முன்தினம், 25 பயணியரோடு ஆம்னி பஸ் சென்றது. பஸ்சை வேல்முருகன் என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில், விருதுநகர் மாவட்டம், ராம்கோ சிமென்ட் நிறுவனத்திற்கு லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்பக்கம் பஸ் மோதியது. இதில், பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. திருநெல்வேலியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் இறந்தார். ஒன்பது பேர் காயம் அடைந்தனர். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Sep-2025