உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அதிக வைக்கோல் பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து அச்சம்

அதிக வைக்கோல் பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து அச்சம்

நரிக்குடி : அதிக வைக்கோல் பாரங்களை ஏற்றி, ஆபத்தான முறையில் செல்லும் மினி வேன், லாரியால் விபத்து அச்சம் உள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.நரிக்குடி பகுதியில் நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கால்நடைகள் வளர்க்கப்பட்ட போது தீவனத்திற்கு வைகோல் தேவைப்பட்டது. தற்போது கால்நடைகள் குறைந்ததால் வைக்கோல் விற்கப்படுகிறது. கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் வைக்கோல்களை வாங்கி வருகின்றனர். இதனை கேரளாவிற்கு ஏற்றி செல்ல மினி வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர். மினி வேன், லாரியில் அளவுக்கு அதிகமான வைக்கோல்களை ஏற்றி செல்கின்றனர். 2, 3, லாரிகளில் ஏற்ற வேண்டிய வைகோலை ஒரே லாரியில் ஏற்றுகின்றனர்.நேற்று நரிக்குடியில அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரி ரோட்டில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள், பின்னால் வரும் வாகனங்கள் விலகிச் செல்ல முடியாத அளவிற்கு மறைத்து சென்றது. அவ்வாறு ஏற்றிச் செல்லும் போது, ஒயர்களில் உரசி அடிக்கடி தீ பற்றி எரிகிறது. அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரியும் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. சில இடங்களில் வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல் பல கி.மீ., தூரத்திற்கு பின் தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.ஆபத்தான முறையில் அதிகமான வைக்கோல் பாரங்களை ஏற்றி செல்லும் மினி வேன், லாரிகளை கண்காணித்து அபராதம் விதித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ