உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மக்களை தேடி மருத்துவத்திற்காகதனி ஆன்லைன் செயலி உருவாக்கம்

மக்களை தேடி மருத்துவத்திற்காகதனி ஆன்லைன் செயலி உருவாக்கம்

விருதுநகர்:மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் நோயாளிகளின் வீடுகளில் இருந்தபடியே அவர்களின் பெயர், சிகிச்சை முறைகள் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலமாக தொற்றா நோய்களை கண்டறிவதற்காக மகளிர் சுகாதார தன்னார்வலராக நியமித்து, மருத்துவக்குழுவினரால் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், வாய்ப்பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களுக்கான அறிகுறிகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரிசோதிக்கப்படுகிறது. நோயாளிகளின் விவரங்கள் அனைத்தும் கையேடுகளில் சேகரிக்கப்பட்டு அதன் பின் கணினி மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தது. தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் நோயாளியின் வீட்டில் இருந்தபடியே அனைத்து விவரங்களை செயலியில் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளில் மேல்சிகிச்சை தேவைப்படுபவர்கள் குறித்து டாக்டர்கள் கவனத்திற்கு நேரடியாக கொண்டு சென்று தொடர்ச்சியாக கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை