சுருள் பாசி தயாரித்தல் பயிற்சி
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் முதுநிலை, உயராய்வு மையம், விலங்கியல் துறை சார்பில் மாநில அளவிலான சுருள் பாசி தயாரிக்கும் பயிலரங்கம் கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் மாணவர், சென்னை சவிதா மருத்துவக்கல்லுாரி மனநலத்துறை உதவிப் பேராசிரியர் மணிவண்ணன் பேசினார். கல்லுாரி உப தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன், உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விலங்கியல் துறை பேராசிரியர்கள் செய்தனர்.