சிலம்ப போட்டி: அரசு பள்ளி சாதனை
சிவகாசி: விருதுநகர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடந்தது.இதில் 400 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மீனம்பட்டி அரசு பள்ளி மாணவர் அன்புமணி 45- - 55 எடை பிரிவில் முதலிடம், அஜய் 55 -- 65 எடை பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.இதன் மூலம் மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார், உதவி தலைமை ஆசிரியர் ஜான் விக்டர், உடற்கல்வி ஆசிரியர் ஸ்ரீதர் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.