உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோப்பைநாயக்கன்பட்டி ரோடு சேதம் மக்கள் அவதி

கோப்பைநாயக்கன்பட்டி ரோடு சேதம் மக்கள் அவதி

சிவகாசி : சிவகாசி அருகே இடையன்குளத்தில் இருந்து எம்.துரைச்சாமிபுரம் வழியாக கோப்பைநாயக்கன்பட்டி செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி அருகே இடையன்குளத்தில் இருந்து எம்.துரைச்சாமிபுரம் வழியாக கோப்பைநாயக்கன்பட்டி செல்லும் ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. ஆனால் தற்போது ரோடு முழுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை. இரவில் மட்டுமல்லாது பகலிலும் டூவீலர், சைக்கிளில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது.மாரனேரி விளாம்பட்டி, காக்கி வாடன்பட்டி பகுதி மக்கள் மல்லி, ஸ்ரீவில்லிபுத்துார் செல்வதற்கு கோப்பை நாயக்கன்பட்டி வழியாகத்தான் சென்று வருவர். இந்நிலையில் ரோடு சேதத்தால் இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு வருகின்ற வாகனங்களும் பெரிதும் சிரமப்படுகின்றன.பட்டாசு ஆலையில் எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் போது மீட்பு பணிக்கு வருகின்ற ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனமும் சிரமப்படுகிறது. எனவே உடனடியாக சேதமடைந்த ரோட்டினை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை