உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் கூரை சேதம் பயணிகள் அச்சம்

விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் கூரை சேதம் பயணிகள் அச்சம்

விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் கூரை தொடர்ந்து சேதமாகி வருகிறது. தற்போது கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருவதால் பயணிகள் அமர்வதற்கே அஞ்சுகின்றனர்.விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லுாரிகளுக்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலரும் வந்து செல்வதால் பழைய பஸ் ஸ்டாண்ட் எப்போது மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.ஆனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்கு தேவையான இருக்கைகள் அமைக்க போதிய இடவசதி இல்லை. மேலும் இங்குள்ள இருக்கைகள் அமைந்துள்ள கூரைப்பகுதி தொடர்ந்து சேதமாகி வருகிறது. தற்போது சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து பயணிகள் மீது இடிந்து விழுந்து வருகிறது.இதனால் இருக்கைகளில் அமர்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு மதுபோதையில் பயணிகள்காத்திருக்கும் இடத்தில் சிலர் பகலில் படுத்துவிடுகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் கூரையை சீரமைத்து, மது குடிப்பவர்களால் பயணிகள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ