மேலும் செய்திகள்
சாலை பள்ளங்களை மூடுவதில் அதிகாரிகள் அலட்சியம்
02-Nov-2024
விருதுநகர் ; விருதுநகர் அருகே வில்லிப்பத்திரி ரயில்வே கேட் ரோடு சேதமாகி உள்ளதால் வாகன ஓட்டிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விருதுநகரில் இருந்து காரியாப்பட்டி செல்லும் ரோட்டில் அதிக அளவில் பருப்பு, எண்ணெய் மில்கள், ஆலைகள் செயல்படுகின்றன. இவற்றிற்கான மூலப்பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்காக விருதுநகர் வழியாகவும், கல்குறிச்சி நான்கு வழிச்சாலை வழியாக தினமும் கனரக வாகனங்கள் வில்லிப்பத்திரி ரயில்வே கேட் ரோட்டை கடந்து சென்று வருகின்றன.அழகியநல்லுார், வரலொட்டி, மாந்தோப்பு, மல்லாங்கிணர், அதனை சுற்றிய பகுதிகளுக்கு செல்லும் முக்கிய ரோடாக இருப்பதால் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த ரயில்வே கேட் ரோடு முறையாக பராமரிக்கப்படாததால் பள்ளங்களாக மாறியுள்ளது. இவ்வழியாக செல்லும் டூவீலர், ஆட்டோ, கார்களின் உதிரிபாகங்கள் கழன்று விழும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் மருத்துவ அவசரத்திற்காக ஆம்புலன்ஸ், ஆட்டோவில் செல்லும் போது பள்ளங்களில் ஏறி இறங்கி செல்வதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ரயில்வே கேட் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
02-Nov-2024