உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமான கட்டடங்கள்

எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமான கட்டடங்கள்

சிவகாசி: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சேதம் அடைந்துள்ள கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் 100 க்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக வருகின்றனர். 20க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடம் உள்ளது. இந்த கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. தவிர குடியிருப்பு கட்டடங்களும் சேதம் அடைந்துள்ளது. இதில் விஷப்பூச்சிகள் தங்களின் இருப்பிடமாக பயன்படுத்துகின்றன. சேதமடைந்த கட்டடத்தின் மேல் பகுதியில் இடிந்த கட்டடம் அருகில் யாரும் வர வேண்டாம் என எழுதி ஒட்டி உள்ளனர். ஆனால் குழந்தைகள், பெரியவர்கள் இதனை கவனிக்காமல் கட்டடத்தின் அருகே நடமாடுகின்றனர். அப்போது கட்டடம் இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை