உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின்கம்பங்கள் சேதம்; வாகன ஓட்டிகள் அச்சம்

மின்கம்பங்கள் சேதம்; வாகன ஓட்டிகள் அச்சம்

சிவகாசி : சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் சேதம் அடைந்துள்ள மின்கம்பங்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டில் அச்சகங்கள், லாரி செட்டுகள், தொழில் நிறுவனங்கள், கடைகள் அதிகம் உள்ளன. இதனால் எப்பொதுமே இப்பகுதியில் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் இந்த ரோட்டில் அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. அடி முதல் உச்சிவரை சிமென்ட் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கிறது. ரோட்டோரத்தில் இந்த மின் கம்பங்கள் இருப்பதால் வருகிற வாகனங்கள் தெரியாமல் உரசினாலே இடிந்து விழ வாய்ப்பு உள்ளது. தவிர பெரிய காற்று அடித்தாலும் மழை பெய்தாலும் விழ வாய்ப்பு உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும். எனவே இப்பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை