உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமான வாறுகால், ரோட்டில் தேங்கும் தண்ணீர்: அவதியில் வாகன ஓட்டிகள்

சேதமான வாறுகால், ரோட்டில் தேங்கும் தண்ணீர்: அவதியில் வாகன ஓட்டிகள்

சிவகாசி: சிவகாசியில் இருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகால் சேதமடைந்து இருப்பதால் மழை நீர் செல்ல வழி இல்லை. வாறுகாலை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசியிலிருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டில் இருபுறமும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வாறுகால் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் தண்ணீர் வாறுகால் வழியாக வெளியேறி கண்மாய், குளத்திற்கு சென்றது. ஆனால் தற்போது ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகால் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. தவிர முட்புதர்களும் ஆக்கிரமித்துள்ளது.தவிர குப்பைகளையும் வாறுகாலில் கொட்டி விடுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டில் ஓடுகின்றது. முழங்கால் அளவிற்கு தண்ணீர் ரோட்டில் தேங்கி விடுவதால் டூ வீலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் உடனடியாக வாறுகாலை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி