உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த தார் ரோடுகள்; சுகாதார வளாகமின்றி அவதி சிரமத்தில் வ.புதுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு மக்கள்

சேதமடைந்த தார் ரோடுகள்; சுகாதார வளாகமின்றி அவதி சிரமத்தில் வ.புதுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு மக்கள்

வத்திராயிருப்பு, : வ.புதுப்பட்டி பேரூராட்சி 10 வது வார்டில் சேதமடைந்து காணப்படும் தார் ரோடு, சுகாதார வளாகமில்லாமல் அவதி, கொசு தொல்லை போன்ற குறைபாடுகளுடன் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர்.மண்டகப்படி தெரு, கண்ணகி தெரு, கான்சாபுரம் ரோட்டுத்தெரு ஆகிய தெருக்களைக் கொண்ட இந்த வார்டில் 600க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர்.இதில் மண்டகப்படி தெருவில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் ரோடு ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மற்ற பகுதிகளில் பேவர் பிளாக் ரோடும் சிமென்ட் தள ரோடும் போடப்பட்டுள்ளது.இதுபோல் கான்சாபுரம் ரோடு தெருவிலும் ஜல்லிகற்கள் பெயந்து தார் ரோடு சிதைந்து காணப்படுகிறது. சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு பொது இடங்கள் இல்லாமல் இந்த வார்டு மக்கள் சுகாதார வளாகமின்றி சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.உள்ளூர் நீராதாரத்துடன் தாமிரபரணி குடிநீரும் கலந்து நான்கு நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. தெருக்கள் சுத்தமாக இருந்தாலும் மாலை நேரங்களில் கொசு தொல்லை காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். மேலும் அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் ரோடு அமைத்து தரவும் சமுதாயக்கூடம் கட்டவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த வார்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தேவை சமுதாயக்கூடம்

- முருகேசன், குடியிருப்பாளர்: சேதமடைந்து காணப்படும் தார் ரோட்டினை சீரமைத்து பேவர் பிளாக் ரோடாக அமைத்து தர வேண்டும். வாறுகால்களை சீரமைத்து அடிக்கடி துாய்மை பணி செய்ய வேண்டும். மக்களின் பயன்பாட்டிற்கு சமுதாயக்கூடம் கட்டி தர வேண்டும்.

பேரூராட்சியில் கோரிக்கை

மீனா, வார்டு உறுப்பினர்: 2 இடங்களில் பேவர் பிளாக் ரோடுகள் போடப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிகளிலும் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் பேரூராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை தெரிவித்துள்ளேன். -

நடவடிக்கை எடுக்கப்படும்

-சுப்புலட்சுமி, பேரூராட்சி தலைவர்: சேதமடைந்த ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், வாறுகால், தெருவிளக்குகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து வார்டு உறுப்பினர், மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ