உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இழப்பீடு தொகை வழங்குவதில் தாமதம் ஸ்ரீவி.,யில் மகளிர் இலவச பஸ்கள் ஜப்தி

இழப்பீடு தொகை வழங்குவதில் தாமதம் ஸ்ரீவி.,யில் மகளிர் இலவச பஸ்கள் ஜப்தி

ஸ்ரீவில்லிபுத்துார் : மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கில் காயமடைந்தவருக்கு விருதுநகர் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.31 லட்சம் இழப்பீடு வழங்காததால், தலைமை குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்படி ஸ்ரீவில்லிபுத்துாரில் 2 மகளிர் இலவச பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் அஜித் குமார் 29, எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். 2019 ஜூலை 14 அன்று தனது டூவீலரில் சங்கரன்கோவில் ரோட்டில் செல்லும் போது எதிரில் வந்த அரசு பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பாதிக்கப்பட்ட அஜித்குமார் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 2020ல் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் காயமடைந்த அஜித்குமாருக்கு விருதுநகர் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் இழப்பீடு வழங்கவேண்டுமென கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதன்படி இழப்பீடு தொகை ரூ. 31 லட்சம் தற்போது வரை அஜித்குமாருக்கு வழங்கப்படவில்லை.இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி அஜித்குமார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனையடுத்து விருதுநகர் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 2 பஸ்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன்படி நேற்று காலை நீதிமன்ற ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த 2 புதிய மகளிர் இலவச பஸ்களை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை