இருக்கன்குடியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க கோரிக்கை
சாத்துார் : சாத்துார் அருகே இருக்கன்குடியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாளாக வலியுறுத்தி வருகின்றனர்.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ஆடி, தை மாதங்களில் நடைபெறும் பெருந்திரு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.அர்ச்சனா நதி வைப்பாறு நதிகளுக்கு நடுவில் அமைந்துள்ள இக்கோயில் பிரசித்தி பெற்றது மேலும் இங்கு இரு நதிகளையும் இணைத்து அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை பகுதியில் பரவலாக உள்ள நிலத்தில் வண்ணவிளக்கு, செயற்கை நீர் ஊற்றுகளுடன்பூங்கா அமைப்பதோடு, அணையில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றி விட்டு இங்கு படகு விடுவதன் மூலம் சிறந்த சுற்றுலா தலமாக மாறும். இதன் மூலம் இந்த பகுதியில் வியாபாரம் மற்றும் தொழில் வளம் பெருகும் வாய்ப்பு உள்ளது.இதனால் இருக்கன்குடியை சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.