விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: காலிப்பணியிடங்களை நிரப்புவது, கோட்ட கணக்கர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை வழங்குவது, அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பிற துறைகளில் உள்ளது போல் கலந்தாய்வு போல் இடமாற்றம் வழங்குவதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். துணை தலைவர் லதா, மாநில தணிக்கையாளர் நாராயணசாமி, பொருளாளர் தங்கமுத்து அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, மருத்துவ நிர்வாக ஊழியர் சங்க மாவட்ட அமைப்பாளர் போத்திராஜ் பேசினர்.