விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த ரிதன்யாவிற்கு நியாயம் கேட்டு மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தவில்லை என தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து விருதுநகரில் அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்க நகர செயலாளர் ராஜேஸ்வரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் தெய்வானை, செயலாளர் உமாமகேஸ்வரி, மாநில செயலாளர் லெட்சுமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சுகந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.