ஆர்ப்பாட்டம்
விருதுநகர்; குரூப் டி பணியிடங்களை ஒழித்து தனியார் ஒப்பந்த பணிகளாக மாற்றியதை கண்டித்தும், பற்றாளர் கூட்டத்தில் மாவட்ட அலுவர்கள் பங்கேற்காமல் புறக்கணிப்பதை கண்டித்தும் விருதுநகரில் தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி., அலுவலர் ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெயராம் தலைமை வகித்தார். செயலாளர் சந்திக்குமாரவேல், மாநில தலைவர் குமார், அமைப்புச் செயலாளர் கருப்பழகு, அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயல் தலைவர் செல்வக்குமார் பேசினர். மாவட்ட பொருளாளர் சுரேஷ் நன்றிக்கூறினார்.