மேலும் செய்திகள்
மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்
17-Jun-2026
சிவகாசி:சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர்கள் கோவிந்தசாமி, நாகராஜன் முன்னிலை வகித்தனர். சி.ஐ டி.யு. மாவட்ட செயலாளர் தேவா, வேல்முருகன், பாலசுப்பிரமணியன், குணசேகரன் பேசினர். டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் மீதி எடுக்கப்பட்ட பணி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி அமர்த்த வேண்டும், தொழிற்சங்க தலைவர்களை பழிவாங்கும் சர்வாதிகாரப் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
17-Jun-2026