மேலும் செய்திகள்
மருத்துவப்படி நிறுத்தம்: ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
07-Oct-2026
விருதுநகர்: பி.எஸ்.என்.எல்., ஓய்வு ஊழியர்களுக்கு மாதந்தோறும் மருத்துவப் படி ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை எவ்வித அறிவிப்புமின்றி நிறுத்தம் செய்ததை கண்டித்து விருதுநகரில் பி.எஸ்.என்.எல்., அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஏ.ஐ.பி.டி.பி.ஏ., மாவட்டச் செயலாளர் புளுகாண்டி தலைமை வகித்தார். போஸ்டல் கிளப் மாவட்ட செயலாளர் சண்முகநாதன், ஏ.ஐ.பி.எஸ்.என்.எல்.பி.டபுள்யூ.ஏ., மாவட்டசெயலாளர் சண்முகம், மாநில உதவித் தலைவர் செல்வராஜ் பேசினர்.
07-Oct-2026