உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனையில் டயாலிஸ் இயந்திரம் இருந்தும் பயனில்லை

அரசு மருத்துவமனையில் டயாலிஸ் இயந்திரம் இருந்தும் பயனில்லை

சாத்துார்: சாத்துார் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரம் இருந்தும் சிகிச்சை அளிக்க முடியாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சாத்துார் அரசு மருத்துவமனை ஹவுசிங் போர்டு காலனியில் செயல்பட்டு வருகிறது இங்கு தினமும் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சாத்துார் மட்டுமின்றி சிவகாசியை சுற்றியுள்ள கிராம மக்களும் சாத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது பலரும் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அதிக கட்டணம் செலுத்தி இந்த சிகிச்சை பெற்று வருகின்றனர். சாத்துார் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரம் மூலம் சிகிச்சை அளிக்க மக்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அரசும் டயாலிசிஸ் இயந்திரத்தை வழங்கியது. ஆனால் இந்த இயந்திரத்தை இயக்க மினரல் வாட்டர் அவசியம் தேவை. தற்போது அரசு மருத்துவமனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 4 போர்வெல்களில் அதிகப்படியான உப்புச்சத்து உள்ளதால் இந்த தண்ணீரை மினரல் வாட்டராக மாற்ற முடியவில்லை. இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சி பொருளாக உள்ளது. அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கான சிகிச்சை நிபுணரும் பணியில் உள்ள நிலையில் மக்களுக்கு இந்த சிகிச்சையை அளிக்க முடியாத நிலை உள்ளது. அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் முனிசாயி கேசவன் கூறியதாவது: சாத்துார் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ்செய்வதற்கான இயந்திரம் வந்துவிட்ட போதும் இந்த இயந்திரத்தை இயக்க அதிகப்படியான சுத்தமான மினரல் வாட்டர் தேவை தற்போது 4 மினரல் வாட்டர் நிறுவனத்தினர் வந்து தண்ணீரை பரிசோதனை செய்துவிட்டனர் இதில் இருந்து மினரல் வாட்டரை தயாரிக்க முடியாது என கூறி விட்டனர்.இருந்த போதும் தொடர்ந்து டயாலிஸ் சிகிச்சை அளிப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை