உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் மீட்கப்பட்ட நிலத்தில் வாகன பார்க்கிங் பக்தர்கள் எதிர்பார்ப்பு

சதுரகிரியில் மீட்கப்பட்ட நிலத்தில் வாகன பார்க்கிங் பக்தர்கள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி மலை அடிவாரத்தில் மீட்கப்பட்ட 8 ஏக்கர் அரசு நிலத்தில், கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஜூலை 22 -- 24 வரை ஆடி அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதை முன்னிட்டு கோயில் நிர்வாகம், விருதுநகர், மதுரை மாவட்ட அரசு நிர்வாகத்தின் அனைத்து துறை சார்பில் பல்வேறு அடிப்படை, முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தாணிப்பாறை மலையடிவாரத்தில் ஆய்வு செய்த விருதுநகர் கலெக்டர் சுகபுத்திரா, அரசுக்கு சொந்தமான ஆக்கிரப்பு நிலம் 8 ஏக்கரை மீட்க உத்தரவிட்டார். அதன்படி நிலம் மீட்கப்பட்டு கடந்த 2 நாட்களாக சமப்படுத்தும் பணி நடக்கிறது.இந்நிலையில் தகவல் தொடர்புக்காக பி.எஸ்.என்.எல். அலைபேசி டவர் அமைக்கப்பட்டுள்ளது. அடிவாரம் முதல் கோயில் வரை 10 இடங்களில் குடிநீர் தொட்டியும், மருத்துவ மையங்களும் அமைக்கப்படுகிறது. 6 ஏக்கர் நிலத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளில் வத்திராயிருப்பு விலக்கு ரோட்டில் இருந்து தாணிப்பாறை வரை 7 கி.மீ., துார இடைவெளியில் பல இடங்களில் வாகன பார்க்கிங் அமைக்கப்பட்டு இருந்தது.இதனால் பக்தர்கள் வனத்துறை கேட் வரை நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி வந்தனர். அதன் பின்பு தான் மலை ஏற வேண்டிய நிலை இருக்கிறது.தற்போது மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலத்தில் வாகன பார்க்கிங் வசதி செய்தால் மிகவும் எளிதாக கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக இருக்கும். இதற்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி