உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெரிய மாரியம்மன் கோயில் முன் எரியாத ஹைமாஸ் விளக்கு பக்தர்கள் அவதி

பெரிய மாரியம்மன் கோயில் முன் எரியாத ஹைமாஸ் விளக்கு பக்தர்கள் அவதி

ஸ்ரீவில்லிபுத்துார்,: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் முன்புறம் உள்ள ஹைமாஸ் விளக்கு கடந்த சில நாட்களாக செயல்படாததால் இருண்ட நிலை ஏற்பட்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். பக்தர்களின் நலனுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கோயில் முன்பு நகராட்சி சார்பில் ஒரு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இது கடந்த சில நாட்களாக பழுதடைந்து செயல்படாததால் இருண்ட நிலை ஏற்பட்டு இரவு நேரங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, இதனை சரி செய்து மீண்டும் செயல்பட வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ