உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடற்புழு நீக்க முகாம் துவக்கம்

குடற்புழு நீக்க முகாம் துவக்கம்

விருதுநகர் : விருதுநகர் பட்டம்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு கலெக்டர் சுகபுத்ரா மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5 லட்சத்து 78 ஆயிரத்து 289 சிறுவர்களுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில், தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகள் இன்று நடந்து வருகிறது. நேற்று விருதுநகரில் பட்டம்புதுார் பள்ளியில் மதிய உணவு உண்ட பின் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் வழங்கினார். மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் ஆரோக்கிய ரூபன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை