உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சி கமிஷனர் திட்டியதால் வருவாய் ஆய்வாளர் மயக்கமா

நகராட்சி கமிஷனர் திட்டியதால் வருவாய் ஆய்வாளர் மயக்கமா

விருதுநகர்:விருதுநகர் நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரவணனிடம் 40, வரி வசூல் விரைந்து செய்ய கமிஷனர் சுகந்தி திட்டியதால் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வீடியோ பரவியது. இத்தகவலை மறுத்த சரவணன் காலை உணவு சாப்பிடாததால் மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் நகராட்சி வருவாய் வரி வசூலில் முழு வசூல் செய்து மாநில அளவில் இடம் பிடித்து வருகிறது. இதே போல ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியும் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்து விடுகிறது. இந்த முறை விருதுநகர் மாவட்டத்தையே மாநில அளவில் முதலில் கொண்டு வர வேண்டும் என நகராட்சி கமிஷனர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது.இதற்காக அந்தந்த நகராட்சிகளில் வரி வசூல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் நகராட்சியிலும் முழுமையான வரி வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கமிஷனர் சுகந்தி வருவாய் பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணனை வரி வசூல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திட்டியதால் அலுவலக வளாகத்தில் நேற்று காலை மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வீடியோ வைரலானது.சிவகாசியில் இருந்து தினமும் பணிக்கு வரும் சரவணன் இத்தகவலை மறுத்துள்ளதுடன் நேற்று காலை வரும் போது அதிக பனி மூட்டமாக இருந்ததாகவும், தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும், காலையில் உணவு உட்கொள்ளாமலும், மாத்திரை எடுத்துக்கொள்ளாததாலும் மயக்கம் ஏற்பட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.கமிஷனர் சுகந்தி கூறுகையில், ''சிவகாசியில் முன்பு பணியில் இருக்கும் போதே சரவணன் இரு முறை மயக்கமடைந்துள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை