விபத்தில் பலி
சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர். நாயுடு நகரை சேர்ந்தவர் கணேசன், 43. ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். ஆக.8 அதிகாலை 3:40 மணிக்கு ஸ்கூட்டரில் (ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் வந்தபோது வேகத் தடையில் வாகனம் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.