உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தினமலர் செய்தி எதிரொலி. சரி செய்யப்பட்ட சாய்ந்த மின் கம்பம்

தினமலர் செய்தி எதிரொலி. சரி செய்யப்பட்ட சாய்ந்த மின் கம்பம்

திருச்சுழி: திருச்சுழி அருகே ஒத்தகடையில் உள்ள மின்கம்பம் சாய்ந்து ரோட்டில் விழும் நிலையில் உள்ளதை தினமலர் நாளிதழில் செய்தி வந்ததையடுத்து சரி செய்யப்பட்டது. திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் ஒத்தகடை பகுதியில் மருத்துவமனை அருகில் மின்கம்பம் சிறிது சிறிதாக சாய்ந்து வருகிறது. களிமண் தரையாக இருப்பதால் மின்கம்பம் விழுந்து விடும் நிலையில் இருக்கிறது. இதன் அருகில் சாயல்குடி - அருப்புக்கோட்டை ரோடு உள்ளது. போக்குவரத்து மிகுந்த பகுதி இது. 2 நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையில் மின்கம்பம் மேலும் சாய்ந்து கிடக்கிறது. முற்றிலும் சாய்ந்து ரோட்டில் செல்லும் வாகனங்கள் மீது விழும் அபாயத்தில் உள்ளது, இதுகுறித்தான செய்தி தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம் வந்தது. இதையடுத்து, மின்வாரியத்தினர் மின்கம்பத்தை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ