உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தோட்டக்கலைத் துறை இயக்குனர் ஆய்வு

தோட்டக்கலைத் துறை இயக்குனர் ஆய்வு

காரியாபட்டி : காரியாபட்டியில் நடந்து வரும் டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணிகளை தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். பயிர் சாகுபடி பரப்பு ஆய்விற்கு அலைபேசி செயலி உருவாக்கப்பட்டு பயிர் சாகுபடியில் அனைத்து தகவல்களும் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் மூலமாக பதிவேற்றம் செய்யும் பணி மாநில முழுவதும் நடந்து வருகிறது.அரசகுளத்தில் நடந்த பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் டிஜிட்டல் சர்வே கணக்கெடுக்கும் பணிகளை ஆய்வு செய்தார். பணிகளை துரிதப்படுத்தி சரியான முறையில் கணக்கெடுப்பு பணிகளை முடித்த வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.வேளாண் துணை இயக்குனர் சுமதி, தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் கார்த்தி, ராஜ்குமார், அலுவலர் பிரபாகரன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை