உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

விருதுநகர் : விருதுநகரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நுாறு நாள் திட்டத்தில் தொடர்ச்சியாக ஊதியத்துடன் வேலை வழங்குவது, அரசாணை 52 ஐ அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர்கள் வளர்மதி, ராதிகா தலைமை வகித்தனர். துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் நடராஜன் பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் நாகராஜ், துணைத் தலைவர் ஆரோக்கிய ராஜ் பேசினர். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ