உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஜய கரிசல்குளம் அகழாய்வில் தங்க மணி கண்டெடுப்பு

விஜய கரிசல்குளம் அகழாய்வில் தங்க மணி கண்டெடுப்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட, 2,460க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில், சிறிய அளவிலான தங்கத்தினால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:பொன் வளையல்கள் தழும்பு உண்டாக்கிய முன் கையில், வலம்புரி சங்கால் செய்த வளையல்களுடன் காப்பு நுாலைக் கட்டியிருந்தாள் பெண்ணொருத்தி என்று நெடுநல்வாடை நுால் உரைக்கிறது. பல ஆயிரம் ஆண்டு காலமாகவே, தமிழர் நாகரிகம், பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக விஜய கரிசல்குளம் அகழாய்வில் புதிதாக தோண்டப்பட்ட குழியில், 1.28 மீட்டர் ஆழத்தில், 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை