மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி
விருதுநகர், : விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் ரோட்டில் உள்ள நோபிள் ஸ்கேட்டிங் மைதானத்தில் ஸ்கேட்டர்ஸ், சாட்டிங் பயிற்சியாளர்கள் அசோசியேஷன் சிவகாசி, சி.எஸ்.ஏ., கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 30 பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் முதல் நான்கு இடங்களை வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் வென்றவர்கள் அடுத்த மாதம் காஞ்சிபுரத்தில் நடக்கும் மாநில போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.