உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 2 மாதம் ஆகியும் கூட்டப்படாத மாவட்ட ஊராட்சிக் கூட்டம்

2 மாதம் ஆகியும் கூட்டப்படாத மாவட்ட ஊராட்சிக் கூட்டம்

விருதுநகர்; விருதுநகரில் மாவட்ட ஊாரட்சி கூட்டம் 2 மாதங்கள் ஆகியும் கூட்டப்படாமல் உள்ளது. செப். 4க்கு பின் 60 நாட்கள் தாண்டியும் அடுத்த கூட்டம் நடத்தவில்லை. பதவிக்காலம் முடிவதால் நடத்த போவது கடைசி கூட்டமாக இது இருக்கலாம் என்பதால் விரைந்து நடத்த வேண்டும் என கவுன்சிலர்கள் எதிர்பார்க்கின்றனர்.விருதுநகரில் மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க., வசந்தி உள்ளார். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர் சிலர் தி.மு.க.,வில் சேர்ந்தனர். இதனால் கவுன்சிலர்கள், தலைவர் இடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளது. இருப்பினும் கடைசி கூட்டம் சுமுகமாகவே முடிக்கப்பட்டது. ஆனால் ஜூலை கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 15வது மாநில நிதி குழுமத்தின் நிதி ரூ.8 கோடியை தங்கள் நிர்வாக பணிக்கு ஒதுக்குவது உள்ளிட்ட 15 தீர்மானங்களை நிறைவேற்ற கோரினர். மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி தீர்மான நோட்டை எடுத்து கொண்டு அலுவலகத்தில் இருந்தே காரில் வெளியேற முற்பட்டார். மாவட்ட கவுன்சிலர்கள் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதற்கு பின் ஆக. 22 கூட்டம் கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் ரத்தானது. செப். 4ல் சத்தமின்றி நடந்தது. இதையடுத்து அடுத்த கூட்டம் தற்போது வரை கூட்டப்படாமல் உள்ளது. 60 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டும். இரண்டரை மாதங்களுக்கு மேலாகிறது. எனவே மாவட்ட ஊராட்சி நிர்வாகம் விரைந்து கூட்டத்தை நடத்த முன்வர வேண்டும் என கவுன்சிலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி