சாத்துாரில் வீதியில் உலாவரும் நாய்கள்
சாத்துார், : சாத்துார் வீதிகளில் கூட்டமாக உலா வரும் தெரு நாய்களால் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.சாத்துார் மெயின்ரோடு ஒரிஜினல் கிணற்று தெரு,சிதம்பரம் நகர், முக்குராந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டமாக உலா வரும் தெரு நாய்கள் வீதியில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தி வருகின்றன.திடீரென தெரு நாய்களுக்குள் மோதல் ஏற்படுவதால் பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது.பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் நாய்கள் கடிக்க பாய்ந்து விடுமோ என பயந்து ஓடும் நிலை உள்ளது.தோல் நோய் ஏற்பட்ட நிலையில் வீதியில் அருவருப்பான நிலையில் உலா வரும் நாய்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.